பெருந்திணையில் பாலையுண்டு..  பெருந்திணைக்கு தூதுமுண்டு..  தூது சென்ற நிலவு  கெடு செய்தி கொண்டு  திரும்பியது.  சாஸ்திரத்தின் இரும்புக் கதவு அடித்துச் சாத்தியதில்  அதற்கு ஆறாத நெற்றிக்காயம்  .  பெருந்திணைக்கும் நினைவுகளுண்டு.  அவற்றைத் தூக்கி அட்டாலியில் எறிந்து விடமுடியாது    பெருந்திணைக்காரன் அழுகிறான்   அதில் அசலான கண்ணீரின்   அதே அளவு  உப்பு.    துஞ்சா மட நெஞ்சை துயில் அமர்த்த   பாடத் துவங்குகிறான்..   " இவ் அளவு  இட்டதே  பெரும்பிச்சை.. "   என்று   தளும்புகிறதப்பாடல்.