நேற்று மாலை சுரேஷ்பேக்கரி வாசலில் நின்று நானும் இளங்கோவும் பேசிக்கொண்டிருந்தோம். இளங்கோ எப்போதும் ஒரு தத்துவவாதியை உடன் அழைத்துவருவது வழக்கம். இந்தமுறை யாரோ யக்ஞ வல்கியராம். சிறிது நேரத்திலெல்லாம் சாமும், ஜானும் வந்துவிட்டார்கள். “ ஏகாந்த..வேளை.. ” என்று பாடியபடி ஜானொடு ஜெயராமன். எல்லோரும் தென்காசிக்குப் போய் கலாப்ரியாவை கூட்டி வந்தோம். கொஞ்சம் கூட்டம் தான் கூடிவிட்டது. கலாப்ரியா அடிக்கடி யெயராமனை கட்டியணைத்து முத்திக்கொண்டிருந்தார். அது குறித்து எம்.கே.டி க்கு ஒரு வருத்தமும் இல்லை அவர் எப்போதும் போல் பூரித்த சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார். பணிரெண்டு பேர் கூடி மணிக்கணக்கில் குடித்துக்கொண்டிருக்கும் ஒரு குவளை தேநீர் மதுரம்....அதி மதுரம் பக்கத்து பெட்டிக்கடையில் வியாபாரம் தூள் பறக்கிறது. சுகுமாரன் ஒரு பாக்கெட்டின் கடைசி சிகரெட்டை புகைத்துக்கொண்டிருக்கையில் கரகரத்த சத்தத்துடன் கடைகளின் ஷட்டர்கள் கீழிறக்கப்பட்டன. விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆணைகளைப் பிறப்பித்த படியே ’ PATROL “ வண்டி ...