திடும்.. திடும்.. திடும்.. திடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்.. திடுமு உறுமியதில் மனத்துக்கண் விழித்துக் கொண்டது. தப்பட்டையும் பலகையும் சேர்ந்து அணைந்து கிடந்த உயிரில் வாய்வைத்து ஊதின. ஒரு நிமிடம் போதும் …. காலில் சலங்கையை ஏற்றிவிட்டு தலையில் ஒரு ஈரிலைத்துண்டை சுற்றிக்கட்ட .. ஆனாலும் அது இயலாது ஏனெனில் நான் ஒரு கனவான் ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… டுட்டூ.. ட்டு… டூ… டுடும் ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்… டுட்டூ.. ட்டு… டூ… டுடும்.. கனவானுக்கு மறுக்கப்பட்ட களியாட்டத்தின் முன் கால்களை இறுக்கிக்கொண்டு நவண்டைக் கடித்த படி நிற்கிறேன் உதறி...