Skip to main content

Posts

Showing posts from June, 2015

ஆசையே இன்பத்துக்காரணம்

 இரண்டு இருக்கைக்கும் பொதுவாக  ஒரு கைக்கட்டை போதுமென்று  யோசித்துச்சொன்னவன் எவனோ  அவனே நமது மூத்தகுடி.  நம் மணிக்கட்டுகள் மகிழ்ந்து குலாவி  அவன் புகழ் பாடுகின்றன உன் இளஞ்சிவப்பு வரிக்குதிரை என்னவோ சொல்கிறது அதன் சத்தங்கள் என் நெஞ்சுக்குள் தாவி குளம்பொலிக்க ஓடுகின்றன. இவ்வளவு நேரமும் எங்கேயோ நடந்து கொண்டிருந்த எல்லா நிகழ்ச்சிகளும் முடிவடைந்து விட்டன. நன்றியுரையும் தீர்ந்துவிடும் பட்சத்தில் நாம் எழுந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும், இந்த வாழ்க்கையை தூற்றி முணுமுணுக்காதே… கடவு ளின் கிருபையால் தானடி நாம் ஒரே வீட்டில் வசிக்கவில்லை. அவர் நமது ஏக்கத்தை ஆசிர்வதித்து காதலை காத்து நின்றார்.

கார் சிறப்பு

                                  வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில் அன்பார்ந்த நடத்துனரே , 10- லிருந்து   7- ஐ கழித்தால் எதுவுமே வாராது என்கிற உங்கள் கணக்கை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன் . வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில் வீதியில் கிடக்கும் பூனைக்குட்டி வீதியைத் தாண்டி வாசலைத் தாண்டி படி தாண்டி என் படுக்கையில் ஏறி   என் மேலும் ஏறலாம் . வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில் ” போய்விடுவேன் … போய்விடுவேன் ” என்று மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு   அன்பை ” போய்விடு … ”   என்று சொல்லிவிடலாம் .   வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில் அடியேன்   நல்லதொரு   நாட்டுக்கழுதை எத்தனை   மூட்டையை   ஏற்ற முடியுமோ அத்தனை   மூட்டையை   ஏற்றலாம் . வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில் சுமாராக பாடும்   ஒரு மனுசனுக்கு “ பிரமாதம் “ என்கிற சொல்லை   வழங்கலாம் . ...

சாய்ஸ்

                                                     பிள்ளைவரம்   வேண்டி    அரசமரம்   ஆலமரம்    அந்தமரம்   இந்தமரம்    கண்டமரம்   சுற்றிக்களைத்த   கடைசியில்    இரங்கி வந்தது இறை …  “ தற்போதைய கையிருப்பு இரண்டு ஆண்மகவுகள் …               ஒரு   குழந்தை “ சச்சின் டெண்டுல்கர் “ என்று   நாமகரணம் சூட்டப்படும் .   16 வயதில்   மட்டையைத் தூக்கிக்கொண்டு உலகத்தின் முன் வருவான்   தன் கதாவீச்சால்   சாதனைகளின்   நெஞ்சைப்பிளப்பான்   ரூபாய் , டாலர் , யென் என எல்லாவற்றிலும் சம்பாதிப்பான் .   இவன்   துய்த்தெறிந்த    பொருட்கள்   லட்சங்களில்   ஏலம் பெறும் .   இவனுக...