தெருமுக்கில் குந்தி பீடி வலிக்கும் பரட்டைத்தலை என் அன்பு நீ பார்க்கும் போது அது பீடியைக் கீழே எறிவதில்லை நீ காணும் போது எறிய வேண்டும் என்பதற்காகவே அதைப் பற்ற வைப்பதுமில்லை ஒரு நிமிடம் முன்புதான் அது ஒரு குருட்டுப்பிச்சைக்காரனுக்கு சாலையைக் கடக்க உதவியது அதற்குத் தெரியும் ஒரு நிமிடத்தில் நீ வந்து விடுவாயென. அதற்குத் தெரியாததோ ஒரு நிமிடம் அவனைத் தாமதிக்க வைக்கும் லாவகம் அது பீடியிலிருந்து சிகரெட்டுக்கு மாறும் முன்பே கண்டு கண்டு சலூன் கண்ணாடிகளை உடைக்கும் முன்பே கிளிப்பசையிலிருந்து மென்கட்டச் சட்டைகளுக்கு மாறும் முன்பே அதை கால்சட்டைக்குள் செருகி விட்டுக் கொள்ளும் முன்பே கிச்சுக்குள் நறுமண தைலங்களை பூசிக்கொள்ளும் முன்பே பிறவியிலிருந்தே சாய்ந்திருக்கும் நடையை வெட்டிச் சீராக்கும் முன்பே அவசர அவசரமாக அதற்கு அன்பு வந்து விட்டது நேர்த்தியற்ற அன்பு உன்னை முத்தமிடுகிறது அது இந்த...