ஒரு நல்ல கவிதையின் இடையே
குறுக்கிட்டு நச்சரித்தாள்
அந்தப் பிச்சைக்காரச் சிறுமி.
இப்போதெல்லாம்
கருணையும், கண்டிப்புமான
அதை அவளிடம்
காட்டித் திரும்புவதற்குள்
கவிதைக்குள் விளையாடிவிட்டது
ஒரு சுண்டெலி.
இரண்டு வரிகளை
இடம் மாற்றி வைத்துவிட்டதது.
அந்தக் கவிதை புரியாமல்தான்
அதைத் தலைமேல்
தூக்கி வைத்துக் கொண்டு
ஒரு சமோசா வியாபாரியைப் போல்
பெட்டி பெட்டியாக அலைகிறேன்.
Comments