காஹா சத்தசஈ மகாராஷ்டரி பிராகிருத மொழியில் எழுதப்பட்ட 700 காதல் பாடல்களைக் கொண்ட நூல். இது கி.பி. 200 க்கும் 450 க்கும் இடையில் ஆந்திரா- மகாராஷ்டிரப் பகுதியில் இருந்து தோன்றியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதை எழுதியது ஹால என்கிற ஆந்திர தேசத்து அரசனென்று ஒரு கருத்தும், இது ஒரு தொகை நூலே என்று இன்னொரு கருத்தும் நிலவுகிறது. இந்நூலுக்கு எழுதப்பட்டிருக்கிற பழைய சமஸ்கிருத உரைகளிலிருந்து இத்தொகை நூலில் இடம் பெற்றிருக்கும் கவிஞர்களில் அறுவர் அல்லது எழுவர் பெண்பாற் புலவர்கள் என்பதையும் அறிய முடிகிறது. காஹா சத்தசஈ யில் இருந்து 251 பாடல்களை ஆங்கிலம் ...