இறுதியில் என்றால் அந்திமத்தில்
அந்திமம் என்றால்
மரணப்படுக்கையில் விழுவதற்கு முந்தையநாள்
அதிகாலைச் சூரியனிலிருந்து
பொன்னொளிர் வண்ணத்திலான
பந்துபோன்ற ஒன்று
என் மண்டைக்குள் இறங்குவதைக் கண்மூடிக் கண்டேன்.
அப்போது கைவசம் விளக்குமாறு இல்லை.
இருந்திருந்தால்
நையப்புடைத்து
அதை ஓட ஓட விரட்டியிருப்பேன்.
Comments