நான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்
அழகான கண்ணாடிப் பேழைக்குள்
பூத்திருக்கும் கேக்குகளை
என் பிராயத்தில்
இவ்வளவு வண்ணங்கள் இல்லை
இவ்வளவு வடிவங்கள் இல்லை
இவ்வளவு அலங்காரம் இல்லை
இவ்வளவு உயரமோ தடிமனோ இல்லை.
நான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்
உலகத்து இன்பங்களையெல்லாம் வழித்தெடுத்து வந்து
நான்கு அடுக்குகளாய்
வடித்து வைத்த கேக்குகளை
எச்சில் கொதிப்பது நின்று விட்டது
எடுத்து ஒரு கடிகடிக்கத் தேவையில்லை
இப்போது
நான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்
என் சர்க்கரை அளவு கட்டுக்குள்தான் உள்ளது.
ஆனாலும்
நான் வெறுமனே பார்க்கத் துவங்கியிருக்கிறேன்.
அழகான கண்ணாடிப் பேழைக்குள்
பூத்திருக்கும் கேக்குகளை
என் பிராயத்தில்
இவ்வளவு வண்ணங்கள் இல்லை
இவ்வளவு வடிவங்கள் இல்லை
இவ்வளவு அலங்காரம் இல்லை
இவ்வளவு உயரமோ தடிமனோ இல்லை.
நான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்
உலகத்து இன்பங்களையெல்லாம் வழித்தெடுத்து வந்து
நான்கு அடுக்குகளாய்
வடித்து வைத்த கேக்குகளை
எச்சில் கொதிப்பது நின்று விட்டது
எடுத்து ஒரு கடிகடிக்கத் தேவையில்லை
இப்போது
நான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்
என் சர்க்கரை அளவு கட்டுக்குள்தான் உள்ளது.
ஆனாலும்
நான் வெறுமனே பார்க்கத் துவங்கியிருக்கிறேன்.
Comments
நானும் கேக்குகளைப் பற்றி சொல்லவில்லை.