அண்டைவீட்டு மனிதன் பால்கனியில் கையில் அழகான காபி கோப்பையை ஏந்தியபடி ஷோக்காக அமர்ந்து கொண்டு ஒரு புத்தகத்துள் ஆழ்ந்திருந்தான். நான் அனிருத்தை இன்னும் கொஞ்சம் அலறவிட்டேன். அவன் முகந்திரிந்து கோணுவதைக் கண்டேன். கோணிய முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சட்டென மலர்ந்துவிட்டது. கைகள் ஆனந்தித்து தாளமிட்டன. இவ்வளவுதான் சத்தம் இதற்குமேல் திருகினால் குழாய் உடைந்துவிடும். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நண்பனொருன் என் திருமணப்பரிசாக வழங்கிய அந்த தடித்த புத்தகத்தை எடுத்துவந்து ஆக்ரோஷமாக வாசிக்கத் துவங்கிவிட்டேன். |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments