நெஞ்சே! இனிய கற்பனைகளை நிறுத்தாதே. நீ பார்த்துத் தீராத உன் சமாதிகளில் ஏதேனும் ஒன்றில் மல்லாந்து படுத்தபடியே அடுத்த கற்பனையைக் கட்டு பலூனில் காற்றை ஊதுவது போல் உன் நெஞ்சில் வாய் வைத்து ஊது. "மனிதன் அப்பத்தால் மட்டுமே வாழ்ந்து விடுவதில்லை" அவனால் வானத்தில் பறக்காமல் பூமியில் நடக்க இயலாது. பாட்டி வடை சுடுவதை நிறுத்திவிட்டால் நிலவு வெடித்துவிடும் ஊட்டு! அன்னை ஊட்டுவது போல் உனக்கு நீயே உருட்டு உருட்டி ஊட்டு! |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments