நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்று ஏலத்திற்கு வந்தது. பிரம்மாண்ட அரண்மனையின் விண்முட்டும் கோபுரம் அதன் உச்சியில் ஒரு சிறுபுறா வாங்கி வந்து வரவேற்பறையில் மாட்டி வைத்தேன். ஒவ்வொரு நாளும் அந்தப்புறா இருக்கிறதாவென தவறாமல் பார்த்துக் கொள்வேன் எனக்குத் தெரியும் அது எழுந்து பறந்துவிட்டால் அவ்வளவு பெரிய பிரம்மாண்டம் சடசடவென சரிந்துவிடும். |
Comments