
கடவுள் என்னை மறந்துவிட்ட போது நான் எவ்வளவோ துண்டுச்சீட்டுக்களை எழுதி எழுதி நீட்டினேன். ஒவ்வொன்றையும் சொத சொதவென குருதியால் நனைத்திருந்தேன் அவர் எவ்வளவோ சதைக்கூளங்களைக் கண்டவர். எல்லாச் சீட்டுகளையும் மொத்தமாக மறந்துவிட்டார். கடவுள் மறப்பது போல் நடிப்பவர் என்பதால் அவருக்கு நினைவுறுத்த இயலாது கடைசியில் அந்தக் கடவுளையே மொத்தமாக மறந்துவிடத் துணிந்தேன். கண்ணீரைக் கேட்க ஒருவருமில்லையெனில் கண்ணீர் விட அவசியமில்லை. |
Comments