டிராக்டர் உழத்துவங்குகிறது. நாரை ஒன்று தரையிறங்கியது புழு வேண்டி. இரண்டாகி நான்காகி பத்தாகி நாரைத் திரள் இப்போது. ராட்சத டயர்களை மறந்து முன்னும் பின்னும் கொஞ்சுவது போல் கொத்திக் கொண்டு திரிகின்றன. ஒரே ஒரு நாயகி அவளை மோகித்து அணையும் பெருங்காதல் கூட்டம் டிராக்டர் உழுதுவிளையாட நாரை உண்டு விளையாட துவங்கி விட்டது ஒரு சிவப்பு வெள்ளைத் திருவிழா |
Comments