கடற்கரையில் களித்திருந்த ஒரு குடும்பம் போட்டோ எடுத்துத் தரக் கோரியது. கடலையும் வானையும் அவர்களோடு கோர்த்து ஒரு சட்டகம் செய்தேன். க்ளிக் செய்யப் போன கடைசித் தருணத்தில் " ஒன் மினிட் ப்ளீஸ்" என்றொரு குரலுயர்ந்து தடுத்தது. அது ஒரு குட்டிப் பாப்பா. இந்தப் படம் எடுப்பவன் கடைசித் தருணத்தில் சொல்லத் தவறிய அத்தனை ஒன் மினிட்களிலும் மோதி ஒலித்தது அந்த ஒன் மினிட். |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments