பிச்சைக்காரனுக்கும் இளம் பைத்தியத்திற்கும் இடையில் இருந்தான் அந்தச் சிறுவன். அர்த்தங்கள் அவசியப்படாதவன் என்பதால் சொற்களற்ற சத்தங்களால் கூவிக் கொண்டிருந்தான். பிச்சைக்காரனோ பைத்தியமோ இப்போது அவன் காலடியில் வந்து நிற்கிறது ஒரு நாய்க்குட்டி அதுவரை தொங்கிக் கொண்டிருந்த கையைத் தூக்கி அதுவரை அழுக்கில் ஊறிய இடுப்பில் கூட்டி சாய்ந்த கோணத்தில் ஒரு நோக்கு நோக்குகிறான். பிச்சைக்காரனிலிருந்து பைத்தியத்திற்குப் போகும் வழியில் நீர் எங்கு வந்தீர் மகாராஜா! |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments