அந்தியின் முன் நிற்பதும், காதலின் முன் நிற்பதும் ஒன்றுதான் சந்திப்பு : சோ. விஜய குமார் உங்கள் படைப்பு மனதை உருவாக்கிய முதல் திறப்புகள் எவை? வாழ்வின் எந்தப் பாதைகளின் வழியே சொற்களை நாடி வந்தீர்கள்? “அங்கு கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் பட வேணும்” என்கிற வரி டேப் ரிக்கார்டரில் ஓடி முடிந்தது. தலை சீவிக் கொண்டிருந்த அப்பா அலங்காரத்தை நிறுத்தி விட்டு ” சற்றே” - ன்னு எழுதுனாம் பாரு.... அதனாலதான் அவன மகாகவிங்கறாங்க..” என்றார். பிறகு மந்திரத்தை முனகுவது போல அந்த ‘ சற்றே’ யை முனகிக் கொண்டே இருந்தார். நான் முதன்முதலில் சொல் முன் திகைத்த தருணம் அதுதான் என்று நினைக்கிறேன். கவிஞனால் காணி நிலத்தை உருவாக்கி அதில் குயிலைக் கூவச் செய்வதோடு மட்டுமல்லாமல் அந்தச் குயிலிற்கும், காதிற்குமான தூரத்தையும் எழுத முடியும் என்கிற வியப்பு அப்போது பள்ளிச் சிறுவனான என்னை இறுகப் பற்றிக் கொண்டது என்று நினைக்கிறேன். அப்பா ‘கவிஞர் ‘ என்கிற முன்னொட்டுக்கு ஏங்குபவர் என்பதால் கவிதை என்கிற சொல் வீட்டில் புழங்கி வந்த ஒன்றுதான். ‘கவிஞரே! “ என்று அழைத்தால் அவர் ஒரு சிரி ...