பேருந்தோ ரயிலோ காத்திருக்காது வீடு பொறுக்காது வேலை பொறுக்காது அந்த நான்கு பேர் உறுதியாகப் பொறுக்க மாட்டார்கள் எனக்குத் தெரியாதா என்ன? என் முகம் வாடுவது கண்டு பூதலத்தில் எதுவொன்றும் வாடி விடாது கண்ணீரை நான் எவ்வளவு காலமாய் கண்டுவருகிறேன் என் கண்ணீர்… அம்மாவின் கண்ணீர்.. பாட்டியின் கண்ணீர்.. அவள் பாட்டியின் கண்ணீர்.. மானுடம் தோன்றிய காலம் தொட்டு கண்ணீரால் எதையுமே தடுத்து விட முடிந்ததில்லை ஆனாலும் சொல்வேன்… "போகாதே…!" |
Comments