Skip to main content

Posts

அதனாலென்ன...

அதனாலென்ன? விகடன் பொங்கல் சிறப்பிதழில் எனது கவிதைகள் வந்திருக்கின்றன. அழகான வடிவமைப்புடன் இடம் பெற்றிருக்கிற அக்கவிதைகளில் இரண்டு இடங்களில் விகடன் கத்தரி வைத்திருக்கிறது. ( வெறும் இரண்டே எழுத்தை தான் நீக்கியிருக்கிறார்கள் என்ற போதும் மனம் வேதனை கொள்ளவே செய்தது). “அதனாலென்னா? “ என்று ஒரு கவிதைக்கு புதிதாக ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்கள். நம்பர் 1 வார இதழில் உன் கவிதை வரும் என்றால் ‘அதனாலென்ன’ டா இசை!..... நண்பர் சுகுணா திவாகருக்கு என் நன்றியும், விகடனுக்கு என் நன்றியும், வருத்தமும். எடிட் செய்யப்படாத எனது கவிதைகள் கீழே... ```````````````````````````````````````````````````` ஓயாத திகில் என் உடல் ஆம்புலன்ஸ் தலை சைரன் பல்ப் மனம் இடுது நாசஊளை. ````````````````````````````````````````````````` 999 வாழ்க்கை இரட்டை வாழ்க்கை வாழ்கிறாய் எனக் கடிந்து கொள்கிறாயே நானென்ன அவ்வளவு நீதிமானா? அடி தோழி! நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன். ````````````````````````````````````````````````````````````````````````````` உன்னை அடைவது ... உன்னை முத்தமிட வேண்டியே உன் இதழ்களை முத்தமிடத் தவிக்கிறேன். உன் இதழ்களை முத்தம...
திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு அதற்கு ஒரு காரணத்தை சொல்ல மறுக்கிறது. சிகரெட்டுக்களை புகையாக்குகிறது. திடீரென மனச்சோர்வால் பீடிக்கபடுபவர்களுக்கென்றே எப்போதும் விட்டத்தில் ஒரு பல்லி அமர்ந்திருக்கிறது. நீங்கள் மனச்சோர்வால் பீடீக்கப்படுகையில் உங்கள் நண்பர்களின் எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் இருக்கின்றன. உங்களுக்கு நீங்களே பேசிக்கொள்ள உருவாக்கிடும் வரிகளை யாரோ ஒருவன் உருட்டுக்கட்டையால் தலையில் அடிக்கிறான். திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு ஒன்பதாவது சுயமைதுனத்தில் இரத்தமாக வெளியேறுகிறது. பிறகு நினைவும் இல்லை. சோர்வும் இல்லை.

‘காயசண்டிகை’ நூல் விமர்சனம்

சிக்கலான அல்ஜீப்ரா கணக்குகளுக்கு திணறும் எளிய மூளை ‘காயசண்டிகை’ கவிதை நூலை முன் வைத்து.. நவீன கவிதைகளில் படிந்திருக்கும் துயரத்திற்கு உலகப் போருக்குப் பிறகான மனித மனங்களில் படர்ந்த இருள் ஒரு காரணமாக சொல்லப்படுவதுண்டு. துயரம் மனிதனோடு சேர்ந்தே பிறக்கிறது. ஆனால் உலகப் போரின் பேரிழப்புகளின் போதே அது பெரிதாக, ஒட்டு மொத்தமாக உணரப்பட்டது என்று இதை நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி துயரக் கறை கொண்ட கவிதைகளின் மேல் தற்போது வைக்கப்படும் ஒரு விமர்சனம் “ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது” என்பது. ஒப்பாரிப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே ஒரு கலைப்படைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற நிலையில், இவ்விமர்சனத்தை நிர்தாட்சண்யமாக ஒதுக்கி விடலாம். ஒரே ஒரு நிபந்தனை, அப்பாடல்கள் கலையின் அழகியலோடு வெளிப்படவேண்டும் அவ்வளவே. நவீன கவிதையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் பலரிடமும் ஒரு ஓயாத துயரத்தைக் காணமுடிகிறது. துயரக் கறைக் கொண்ட இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் அடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘காயசண்டிகை’ 2007ல் வெளிவந்து தற்போது பரவலாக கவனம் பெறத் துவங்கியிருக்கிறது. வாழ்வு தரும் நெருக்கடிகள் வழங்கியவை இக்கவித...
விசில் ஒலிக்கும் சமோசா பொறிஞர் ஆனந்துக்கு இன்றைய தேநீர் இடைவேளையின் போது ஒரு சமோசா சாப்பிடவேண்டும் என்று தோன்றியது. தாளித்த வெங்காயத்தின் பொரித்த வாடைக்கு நாசி கிரங்கியது. கண்களை மூடி ஒரு முறை முகர்ந்ததில் அவர் தன் 22 வருடங்களை உள்ளிளுத்துக் கொண்டார். முக்கோண வடிவ சமோசா நீள் சதுர வெண் திரையானது. பொறிஞர், இப்போது லட்சுமி டாக்கீஸின் மணல் குட்டின் மேல் அமர்ந்திருக்கும் சிறு பொடியன். தங்க மீனை எடுப்பதற்காக தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார் கமலஹாசன். நினைத்ததை முடித்தாக வேண்டும் தலைவர். மூதாட்டிகள் கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள். ஊஞ்சலைப் போல ஆடிக்கொண்டிருக்கிறது கயிறு. சற்றைக் கெல்லாம் சடசடவென எழுந்த கரவொலிகளுக்கிடையே அரங்கைக் கிழிக்கிறது ஆனந்தின் விசில் சத்தம்.
எழுத வந்த கதை எழுத வந்த கதையை எழுதும் படி தமிழ் கேட்டிருந்தார். இப்படி எழுதும் அளவுக்கு நான் வலையில் பெரிதாக எதையும் எழுதவில்லை. எழுத வந்த கதை, கடந்து வந்த காட்டாறு என்றெல்லாம் உண்மையில் என்னிடம் எதுவும் இல்லை.தழிழ் எழுதி இருப்பது போல வலையில் எழுத வந்ததற்க்கான வலுவான காரணம் எதுவும் என்னிடம் இல்லை.அதனால் உண்மை எதுவென்று யோசித்து எழுத முயன்றிருக்கிறேன். முதல் சந்திப்பிலேயே உங்கள் கவிதைகள் சிலதை மனப்பாடமாக சொல்லி உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வாசகன் ஒருவன் உங்களுக்கு கிடைத்திருக்கிறானா? உங்கள் பெயர் சபைகளில் உச்சரிக்கப்படும் போது தன்னையும் சுற்றத்தையும் மறந்து கைதட்டிக் குதூகலித்து, சிறு பிள்ளை கோலம் கொள்ளும் நண்பன் ஒருவன் உங்களுக்கு இருக்கிறானா? எனக்கு அப்படி ஒருவன் உண்டு. அவன் நரன். அவன் தான் சில மாதங்களுக்கு முன் “உன் கவிதைகளை ப்ளாக் கில் போடலாமா” என்று கேட்டான். நான் “அப்படீனா என்ன” என்று கேட்டேன், பொதுவாக நவீன உலகின் மூளைச்சாவரியில் கலந்து கொள்ளாமல் ஓரமாக ஒதுங்கி நடப்பதே என் சுபாவம். அறிவியல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற புதிய வாய்ப்புகளை அவசர அவசரமாக கற்றுத்தேர்வதில் எனக்கு ...

poem

கண் கொள்ளா காட்சி கண் கொள்ளா காட்சி என கத்தி ஒன்றைக் கண்டேன். அதன் தகதகப்பில் மனமழிந்து பித்தானேன். நெஞ்சைக் கீறி ரத்தமீந்தேன் அதன் கூர் நுனிக்கு. முதல்கலவியென வருடி வருடித் திளைத்தேன். ஏற்கனவே வெட்டுண்ட ஒரு கோடி தலைகளுள் ஒன்றாகும் மோகத்தால் கொல்! கொல் ! என்று மண்டியிட்டு கதறுகிறேன்.

கவிதை

குத்துப் பாட்டின் அனுபூதிநிலை இந்த வீட்டின் ஜன்னல்களை மூடினேன். கதவுகளைச் சாத்தினேன் மறவாமல் இவ்வுலகை வெளியே தள்ளி தாழிட்டேன் இசை துவங்கியது பேழையிலிருந்து வெளிப்பட்ட குரலுருவும் நானும் கைகோர்த்து ஆடத் துவங்கினோம். ஆட்டம் ... குதியாட்டம் ... பேயாட்டம் .... மொழ மொழன்னு யம்மா யம்மா ... மொழ மொழன்னு யம்மா யம்மா ... தலை வழி பீறிட்டு விண்முட்டி அடிக்குதொரு நீரூற்று தடதடன்னு நடக்குறா மடமடன்னு சிரிக்குறா வெட வெடன்னு இருக்குறா கொட கொடன்னு கொடையிறா மொழ மொழன்னு யம்மா யம்மா ... மொழ மொழன்னு யம்மா யம்மா ... ஆயிரம் கரங்கள் கூடி ஆனந்த கொட்டடிக்க அதிரும் நானொரு களி கொண்ட பேரிகை பஞ்சுமிட்டாய் இடுப்பழகி ஓலக்கொட்டாய் உடுப்பழகி ப்பெப்பர் முட்டாய் பல்லழகி க்கொட்டப் பாக்கு கண்ணழகி ராங்கீ ... மனச வாங்கீ... எனதுடலா இது எனதுடலா இப்படி பூரிப்பில் துடிதுடிக்கும் இது என்ன எனதுடலா ? எனதுடலா? எனதுளமா இது எனதுளமா ஈனக்கவலைகள் எரியும் நெருப்பில் ஜொலிப்பது என்ன எனதுளமா ? எனதுளமா? (ராங்கி அனுராதா ஸ்ரீராமுக்கு ..)