Skip to main content

உப்புபுளிமிளகாயார்




உப்புபுளிமிளகாய் மறுக்கப்படுவதாக
தீர்ப்பு சொன்ன நாளில்
அவன் கவிச்செருக்கில் ஓங்கரித்தான்.
தான் உப்பென்றெழுத உப்பாகும் என்று கூவினான்.
ஆனால் அப்படியெதுவும் ஆகவில்லை.
நான் ஒரு மோசமான கவியா என்று
வானத்தை நோக்கிக் கத்தினான்.
உடைந்து உடைந்து அழுதான்.
உப்புபுளிமிளகாய், உப்புபுளிமிள்காய் என்று
உளறி உளறி பித்தானான்
காடுகரைகளில், தோட்டவயல்களில், வீட்டுச்சுவர்களில்,வனத்து மரங்களில்
கோவில்பிரகாரங்களில், நடைபாதைவழிகளில்,
ஆற்றில், குளத்தில்
ஊருணி நீரில்
எங்கும் எப்போதும்
ஒரு கிறுக்கு ஓவியனைப் போல
உப்புபுளிமிளகாய் என்று எழுதிக்கொண்டிருந்தான்.
கடைசியில் கலைவாணி கண் திறந்தாள்.
அவன் உப்பென்றெழுதியததெல்லாம் உப்பாகி
ஊர் உப்புபுளிமிளகாய்க்குள் மூழ்கியது.
...
அவன் பித்தாகி அலைந்த காலங்களில்
எழுதிய 400 பாடல்கள்
கி.பி.6 ம் நூற்றாண்டில் பூவூர்கிழார் என்பவரால்
"அறநானூறு" என்கிற பெயரில்
தொகுக்கப்பட்டது.
கவிஞரின் பெயர் பற்றிய குழப்பங்கள் நிலவியதால்
எழுதியவர் பெயர்
"உப்புபுளிமிளகாயார்" என்றே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
" இதன் தலைப்பை கருதி இதை பதினென்கீழ்கணக்கு நூல்களில்
ஒன்றாக வைத்து எண்ணுதல் தாகாது என்றும்,
இவை ஆழ்ந்தவாசிப்பை கோரும் நுட்பம்மிகுபாடல்கள் என்றும் குறிப்பிடுகிறார் நச்சினார்க்கினியர்.
இக்கவிதைகளின் லய ஒழுங்கும், ஓசைநயமும்
இதைப் படிப்போரின் இருதயதில் ஓயாது ஒலிக்க வைப்பன
என்று புகழ்கிறார் மணிநாப் புலவர்.
அறநானூற்றின் சில பாடல்களை
சித்து வேலை செய்வோர் ரகசியமாக பயன்படுத்தி வந்ததாக
ஒரு கருத்துண்டு.
...

சுப்பிரமணிய பாரதி
தன் கஷ்டகாலங்களில்
உப்புபுளிமிளகாயாரை வேண்டிப் பாடி
உப்புபுளிமிளகாய் பெற்றுக்கொண்டதாக
ஒரு தகவலுண்டு.
ஆனால் பாரதி ஆய்வறிஞ்ர் யாரும்
இதுவரை இத்தகவலை உறுதி செய்யவில்லை.
...
"உப்புபுளிமிளகாயூரை" சேர்ந்த 200 பெண்கள்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்
அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டனர்.
சாலைகளை மறித்துப் போராடினர்.
இதனால் நேற்று கோவை மாநகர் முழுக்க
போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டது.
...
அறநானூற்றின் பிரதிகள் எதுவும்
தற்போது காணக்கிடைப்பதிலை.
ஆனால் ஹெச்.சி.ரசூல் ஒரு முறை
அறநானூற்றின் பிரதியொன்று
தன்னிடம் இருப்பதாகவும்,
ஆனால் அதை தான் எங்கும் வாங்கவில்லை என்றும்
ஒரு நாள் புத்தக அலமாரியில் இருந்து
அது திடீரென வெளிப்பட்டதாகவும்
மிரட்சியுடன் குறிப்பிட்டார்.
லீனா மணிமேகலை
அறநானூற்றின் சில கவிதைகளை
அவ்வப்போது எனக்கு ஈ மெயிலில் அனுப்புவதுண்டு.

Comments

Anonymous said…
அப்றம்?
///சுப்பிரமணிய பாரதி
தன் கஷ்டகாலங்களில்
உப்புபுளிமிளகாயாரை வேண்டிப் பாடி
உப்புபுளிமிளகாய் பெற்றுக்கொண்டதாக
ஒரு தகவலுண்டு.
ஆனால் பாரதி ஆய்வறிஞ்ர் யாரும்
இதுவரை இத்தகவலை உறுதி செய்யவில்லை./////

எனக்கு தமிழ் கற்பித்த தமிழ் ஆசிரியர் ஒருமுறை இதைப் பற்றி எனக்கு சொல்லி இருக்கிறார் . ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே தகவலை வாசிக்கும் இந்த சந்தர்பத்தை ஏற்படுத்திய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி .
________________
அனானி,

என் தளத்திற்கு வரும் முதல் அனானியை வருக வருக என்று வறவேற்கிறேன். என்னா பாஸ்.. நான் எல்லாம் ஒரு ஆளுன்னு எனக்கெல்லாம பயப்படறது.... எல்லாரும் பாத்துக்குங்க நானும் ரவுடி தான்.. நந்தவனதாண்டி பாடல்களுக்கு "மயிர்" என்று பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்..
" மயிர் கெட்ட வார்த்தை இல்லப்பா .. தூய தழிழ் வார்த்தை..".
நன்றி.. மீண்டும் வருக..
மறத்தல் இசையில் சுதந்திரம்/தந்திரம்.
Poem Hunter said…
why this article gives prose like mood?
உப்புபுளிமிளகாயார் பாரதிக்கு மட்டுந்தான் கொடுப்பாரா? தமி்ழ்நதிக்குக் கொடுக்கமாட்டாரா? இந்த 'கும்பிடுற'வேலையெல்லாம் வேண்டாம்னு பார்த்தா கவிதை விடமாட்டேங்குதே:)
பறத்தல் அதன் சுதந்திரம் கேள்விப்பட்டிருக்கிறேன். சரவணன், 'மறத்தல் இசையின் சுதந்திரம்-தந்திரம்'?

கவிஞர்கள் பேச்சு புரியமாட்டேனென்கிறது.

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.