வானம் சிக்னலில் சிக்கிக் கொண்டது. ஒரு பிச்சைக்கார சிறுமி அதை நெருங்கி வந்து பிச்சை கேட்கிறாள். வானம் சிவப்பு விளக்கை வெறித்துக் கொண்டு நிற்கிறது. அவள் தொட்டு தொட்டு நச்சரிக்க எரிச்சலில் ஃபேண்ட் பாக்கெட்டில் திணித்திருந்த பர்ஸை எடுத்து அதில் சில்லரைகளைத் தேடியது. அவை எங்கோ இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்தன. எனவே வானம் பர்ஸை ஒரு குலுக்கு குலுக்கியது அப்போது உள்ளிருந்து தெறித்து விழுந்தது ஒரு யோனி. கடவுள் கிருபையால் சிக்னல் எடுக்க இன்னும் பத்து வினாடிகள் இருந்தன. பதறித் துடித்த அது ஐந்து வினாடிகளுக்குள் தவறவிட்டதை கைப்பற்றி விட்டது. அருகிருந்த பேக்கரியில் தண்ணீர் பாட்டில் வாங்கி அதை நன்றாக அலசி தன் கர்ச்சீப்பால் துடைத்து உலர்த்தி மீண்டும் பர்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டு கிளம்பியது. நீலம் வழக்கமாக போகும் பேருந்தில் இன்று கூட்டம் அதிகம். நிற்க கூட இடம் இல்லை. எனவே அது ஒற்றைக் காலில் பயணித்தது. உணவு இடைவேளையில் பையை திறந்து பார்த்தால் சாம்பார் டப்பாவும், தயிர் கிண்ணமும் கழன்று பை முழுக்க சிந்தியிருந்தது. அதன் ஈரமும் நாற்றமும் அதற்கு எரிச்சலூட்டியது. அது அவசர அவசரமாக பையில் இருந்த பொருட்களை எட...