Skip to main content

வானம் - நீலம்

வானம் சிக்னலில் சிக்கிக் கொண்டது.
ஒரு பிச்சைக்கார சிறுமி
அதை நெருங்கி வந்து பிச்சை கேட்கிறாள்.
வானம் சிவப்பு விளக்கை வெறித்துக் கொண்டு நிற்கிறது.
அவள் தொட்டு தொட்டு நச்சரிக்க
எரிச்சலில்
ஃபேண்ட் பாக்கெட்டில் திணித்திருந்த பர்ஸை எடுத்து
அதில் சில்லரைகளைத் தேடியது.
அவை எங்கோ இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்தன.
எனவே வானம்
பர்ஸை ஒரு குலுக்கு குலுக்கியது
அப்போது உள்ளிருந்து தெறித்து விழுந்தது ஒரு யோனி.
கடவுள் கிருபையால் சிக்னல் எடுக்க
இன்னும் பத்து வினாடிகள் இருந்தன.
பதறித் துடித்த அது ஐந்து வினாடிகளுக்குள்
தவறவிட்டதை கைப்பற்றி விட்டது.
அருகிருந்த பேக்கரியில் தண்ணீர் பாட்டில் வாங்கி
அதை நன்றாக அலசி
தன் கர்ச்சீப்பால் துடைத்து உலர்த்தி
மீண்டும் பர்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டு கிளம்பியது.

நீலம் வழக்கமாக போகும் பேருந்தில்
இன்று கூட்டம் அதிகம்.
நிற்க கூட இடம் இல்லை.
எனவே அது ஒற்றைக் காலில் பயணித்தது.
உணவு இடைவேளையில்
பையை திறந்து பார்த்தால்
சாம்பார் டப்பாவும், தயிர் கிண்ணமும்
கழன்று பை முழுக்க சிந்தியிருந்தது.
அதன் ஈரமும் நாற்றமும் அதற்கு எரிச்சலூட்டியது.
அது அவசர அவசரமாக பையில் இருந்த பொருட்களை
எடுத்துப் பார்த்தது.
எல்லாவற்றிலும் ஈரம் படர்ந்திருந்த்து.
நல்ல வேளையாக
ஒரு தனிஅறையில்
பிளாஸ்டிக் கவருள் வைத்து
பத்திரமாக பின்னடிக்கப்பட்டிருந்த கறுத்த குறிக்கு
எதுவும் நேர்ந்திருக்கவில்லை.
அதை மட்டும் எடுத்து
தன் பிரத்யேக லாக்கரில் வைத்து பூட்டி விட்டு
நனைந்த பொருட்களையெல்லாம் ஃபேனுக்கடியில் வைத்து விட்டு
கேண்டீனுக்கு போகிறது நீலம்

Comments

Popular posts from this blog

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை