
கடைசியாக பார்க்கையில்
அவனும் இளையராஜாவும்
மொட்டை மாடிக்கு போய்க் கொண்டிருந்தார்கள்
அத்தனை நட்சத்திரத்திலும்
ஒரு நட்சத்திரம்
தனித்து ஜொலித்துக் கொண்டிருந்தது.
அருகில் பெரிய பூவரசம் நிற்கிறது
சின்ன காற்று ...
அந்த நட்சத்திரமும் பூவரசமும் ஒரு தபெலாவும்
சேர்ந்தடித்த காற்று..
அவன் கிழத்தி எத்தனை நேரமாய்
அவனை சாப்பிட அழைத்துக் கொண்டிருப்பாள்
மேலே வந்து பார்த்த போது
ஒரு கோழிப் பொங்கு
வானத்தில் போய்க் கொண்டிருந்தது.
Comments