உன் காட்டுத்தீயின்
சடசடப்பு ஒய்ந்துவிட்டது
இப்போதெல்லாம் உன்னை
வாடை கடிப்பதில்லை
நல்ல ஊண்..
பிறகெங்கு கைத்தொடி
நெகிழ ?
பால் கசப்பதில்லை
படுக்கை நோவதில்லை
உன் கண்களின் காந்தத்தை
கழற்றி
பழையிரும்புக்கடைக்குப்
போட்டாய்
கைகளைக் காட்டு...
நகக்கொறி
நின்றுவிட்டது
உன்னை அந்த
ஞாயிற்றுக்கிழமையிடம் சொல்லவா ?
Comments
உதா. ( www.mydomain.blogspot.in ----> www.mydomain.in )
தொடர்புக்கு :
தீபா - +91 90437 74889