1. காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி என்கிற உங்கள் முதல் தொகுப்பு வாசிக்கக் கிடைக்கவில்லை. 2002ல் வெளிவந்த அந்தத் தொகுப்பிற்கும் சிவாஜிகணேசனின் முத்தங்களுக்குமான இடைவெளியில் இசை என்ற கவிஞர் அடைந்திருக்கும் பரிணாமம் என்ன? ஆமாம். அந்தப் புத்தகம் ”நமக்கு நாமே “ திட்டத்தின் கீழ் நானே போட்டுக் கொண்ட தொகுப்பு. இளங்கோ, சுகுமாரன், கல்யாண்ஜி போன்ற சிலரைத் தவிர அதிகமாக யாரும் அந்தப் புத்தகத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எழுதத் துவங்கும் எல்லா கவிஞனுக்குமான ஒரு இயல்பான குறுகுறுப்பின் விளைவே அந்த நூல். இன்று அதில் வாசிக்க ஒன்றுமில்லை தான். ஆனால் சிலர் ஏனோ ”இது போன்ற” தன் ...