பீடையின் எண்ணிறந்த ஸ்தலங்களில்
நான் கொஞ்சம் விசேசம் என் கண்களைத் திறந்து வைத்தால்
நன்றாக காற்று வரும்.
சுற்றிலும் வேம்பும் அரசும் நிற்கின்றன.
இடிக்கு தூர்ந்து விடாது
மழைக்கு ஒழுகி விடாது
இதமான வர்ணங்களால்
எழிலுற வனையப்பெற்ற
விசாலமான அறைகள்...
இவ்வுடல் பூடைக்கு கொழுநிழல்.
என் கால்மேல் கால்போட்டு
மார் மேல் தலைசாய்த்து
அப்படியொரு தூக்கம் அதற்கு.
Comments