இன்றைய நிலவரப்படி கால்கிலோ கேரட் 7 ரூபாய்கு விற்கப்படுகிறது நான் எப்படியும் தினமும் குறைந்தது இருநூறு ரூபாய் சம்பாதித்து விடுவேன் ஆக எப்படியும் எனக்கு கேரட் உண்டு கேரட்டுக்கு இந்த கேரட் நிறம் எப்படி வந்தது ? மேலும், கேரட் எங்கு எப்படி விளைகிறது ? அதன் மூலக்கூறுகள் யாவை ? இந்த வெங்காயமெல்லாம் எனக்குத் தேவையில்லை நமக்கு ஆயிரத்தெட்டு சோலிகள் கிடக்கின்றன ஓவராகச் சிந்திக்காதே .. இரண்டு மிளகாயைக் சேர்த்துப் போட்டு.. தேங்காயை துருவிக் கொட்டினால்... அட... டடா... விலைவாசி விண்ணைமுட்டி அதற்கு அப்புறமாய் பறந்தாலும் நம் கேரட்டை நம்மிடமிருந்து யாராலும் பறித்து விட முடியாது போதும் உன் கேரட் புராணம்... நாளை இந்த ப்ளாஸ்டிக் டம்ளர்களை மாற்றி விட வேண்டும் ஒரு மாசத்துக்கும் மேல் ஆகிறது.. ஆமாம்.. மாற்ற வேண்டும்... மாற்ற வேண்டும் நீ உன் டம்ளரை எடுத்துக் கொள்... ஓ.. நீ தான் இல்லை அல்லவா ? சண்டையிட்டுப் பிரிந்து விட்டாய்.. சரி... பிரிந்தால் போய் விட வேண்...