வழக்கம் போல் கதவை எட்டி உதைத்தேன்.
முரண்டு பிடித்தது
மறுபடியும் உதைத்தேன்
மறுபடியும் முரண்டது
மூன்றாவது உதைக்கு
என் காலைப் பற்றி தூரத்தில் எறிந்தது
எழந்து வந்து மீண்டும் முயல்கையில்
அது ஆடாது நிற்க
நான் குப்புற விழுந்தேன்.
கபாலத்தால் வெறிகொண்டு முட்ட
கிறுகிறுவென்றது உலகம்
உன்னையும் விட்டு விட்டால்
உதைக்க ஓர் ஆளில்லை
மல்யுத்தனின் புடைத்தெழுந்த தேகத்துடன்
நான் ஓடோடி வருவதைப் பார்
என்னையே தூக்கி உன் மேல் எறிந்து
பொடிப் பொடியாக்குவேன் காண்.
- Get link
- X
- Other Apps
Comments