மனையாட்டி ஊருக்கு போயிருந்த நாளில்
தன்னிச்சையாக
மொட்டை மாடிக்குப் போனான்
கருநீல வானத்தில் கரைந்து நின்றான்
குறைமதிக்கும் நெஞ்சழிந்தான்
நட்சத்திரங்களில் மினுமினுத்தான்
அவள் வீட்டில் இருக்கையில்
இவ்வளவு பெரிய வானம்
இத்தனை கோடி விண்மீன்கள்
இப்படி ஜொலிக்கும் நிலவு
இவையெல்லாம்
எங்கே ஒளிந்து கொள்கின்றன
என்று
ஒரே ஒரு கணம் யோசித்தான்.
மறுகணம்
அஞ்சி நடுங்கி
" miss u" என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினான்.
- Get link
- X
- Other Apps
Comments