புறவழிச்சாலையின் சிடுக்கான சந்திப்பொன்றில்
கோர விபத்து
வாகனங்கள் உருக்குலைந்து
9 பேர் அங்கேயே இறந்து விட்டனர்
4 பேர் உறுப்புகள் துண்டான நிலையில் மருத்துவமனையில் கிடக்கிறார்கள்.
பெட்டிக்கடை முருகேஷ்தான்
சம்பவத்திற்கான நேரடி சாட்சியம்
அவனுக்கு
சுவாரஸ்யத்தின் தொடைக்கறி சிக்கிவிட்டது
அந்த வாரம் முழுக்க
அவன் அதை வைத்து வைத்து
உண்டதைக் கண்டேன்.
- Get link
- X
- Other Apps
Comments