40- ல் நிற்கும் போது
ஒரு தூணையோ, கம்பியையோ
ஒரு தூணையோ, கம்பியையோ
பிடித்துக் கொண்டு நிற்பது நல்லதென்று
ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டிருந்தும்
கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டேன்.
காலடியில் திறந்து விட்டது அங்கிளின் பாதாளம்
எனினும்
நாற்பதில்தான் வாழ்வு துவங்குவதாக
மேற்குலகு சொல்கிறது
மேற்கோ, கிழக்கோ
என்னைக் குஷிப்படுத்தும் படி
யார் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன்.
கடவுள் லேட்டாக வருபவரே ஒழிய,
வராமலேயே போய் விடுபவர் அல்ல
நான் இன்னும் நம்புகிறேன்
என் மீசைக்குள் கிடந்து
அதிலொரு நரையை வளைத்து வைத்து
முதிராத் திங்களென கொஞ்சும் ஒருத்தியை.
- Get link
- X
- Other Apps
Comments