பாலக்காடு பைபாஸில் ஒரு இருசக்கர வாகனத்தைப் பார்த்தோம். யுவதி தன் காதலனின் கழுத்தைச் சுற்றி வளைத்திருப்பது போல அந்த இளைஞனின் உயிரில் பற்றிப் படர்ந்திருந்தார் எம்.எஸ்.வி "சம்போ.....ஓ..ஓ.. சிவசம்போ...." எதையும் முந்தாமல் எல்லாவற்றையும் முந்திச் செல்லும் ரசவாதம். ததும்பித் ததும்பி இன்பத்துப் புழுதிக்குள் உருள்கிறது அந்த வாகனம்.. "லலா...ரீரரா... லலா... ரீரரா.. லலா...ரீ .ரரா...சிவ சம்போ...ஓ.ஓ.." நண்பன் சொன்னான்.. "சொர்க்கத்துக்கு போவது போல துள்ளித் துள்ளி பாய்கிறது அது.." நான் சொன்னேன்... "முட்டாளே! இப்போதே அது சொர்க்கத்தில்தான் இருக்கிறது." |
Comments