2 நிமிடத்திற்கு ஒருமுறை வாட்ஸ் அப்பை திறந்து பார்ப்பேன் 5 நிமிடத்திற்கு ஒருமுறை இ- மெயிலைத் திறந்து பார்ப்பேன் பேஸ்புக்கைத் திறக்கிறேன் மெசஞ்ஜரைத் திறக்கிறேன் மெசேஜைத் திறக்கிறேன் எங்கேயும் இல்லை எனக்கான செய்தி. அது ஒரு புழுவாகி கல்பகாலத்திற்கும் அப்பால் ஊர்ந்துவருகிறது. இவனோ திறந்து திறந்து திறந்து திறந்து திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். |
Comments