
தீபாவளி வந்துவிட்டது துப்புரவுப் பணியாளர்கள் பண்டிகைப் பணம் கேட்டு வருகிறார்கள். அவள் இளையவள் மற்றும் கடுகடுப்பானவள் அநேக வீடுகளில் அவளை மேலும் கடுப்பாக்கி அனுப்புகிறார்கள். மூன்று தெருக்களை மேய்க்கும் அவளைப் போன்றே முந்நூறு மனிதர்களை மேய்க்கும் நானும் கடுகடுப்பானவன். இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து நீட்டினேன் அதே கடுப்போடு. முகம் முழுக்க அலைபரப்பி அப்படியொரு சிரிப்பு அவளுக்கு. யார் கொடுத்தது? யார் கொண்டது? அந்தச் சிரிப்பை நாளெல்லாம் ஏந்திக்கொண்டு சுடர்விடுவதோ நான். |
Comments