
அம்மா அப்பாவிடம் அவ்வளவு கனிவோடு சொன்னாள்... "தீபாவளியன்னைக்கு அஞ்சாறு குலோப் ஜாமூன் சாப்டா அதெல்லாம் ஒன்னும் ஆயிடாதுங்க..." அம்மாவின் உறுதிப்பாடு கேட்டு க்ளூக்கோ மீட்டர், குலோப் ஜாமூன் இரண்டுமே ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டன. குலோப் ஜாமூன் ஏதுமறியா ஒன்று அம்மா அதனுள் காலத்தைப் புகட்டிவிட்டாள். அது ஒரு சடப்பொருள் அம்மா அதில் உயிரைப் பற்றவைத்தாள். மனமற்ற அதனுள் இரக்கத்தைப் பெருகப்பண்ணினாள். அப்பா கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டார். அடுத்த முறையிலிருந்து "குருவிவெடி" நான்கு கட்டுகள் சேர்த்து வாங்கவேண்டும் குலோப் ஜாமூன் வெடிப்பதற்கு. |
Comments