வாயில் தேன் ரப்பரோடு கிலு கிலுப்பைக்குச் சிரித்தபடி மல்லாந்திருந்த பருவத்தில் எனக்குப் பெயர் சூட்டினார்கள். அதை மூன்று முறை என் காதிலும் சொன்னார்கள் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. தமிழும் தெரியாது. தெரிந்திருந்தால் அந்தப் பெயரின் மீது அப்போதே மூத்திரம் பெய்திருப்பேன். அவ்வளவு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி தலைமீது வைத்து விட்டு அந்தக் கழுத முண்டை பாடினாள்... பாடினாள்... பாடிக் கொண்டே இருக்கிறாள்... "கண் மூடு இரத்தினமே!" "கண் மூடு இரத்தினமே!" "கண் மூடு இரத்தினமே!" . |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments