உள்கதவைத் தாழிட்டாலே
உலகம் மறைந்து விடும்
அவளுக்கு
வெளிக்கதவையும் அடைக்கவேண்டும்
வாசற்கதவையும் சாத்த வேண்டும்
ஜன்னல் வழியே உள்நுழையும் கள்ள ஒளிக்கீற்றை
ஒரு முறை முறைப்பாள்
அது வந்த வழியே ஓடி விடும்
புழுக்கத்தின் இன்பத்துள் வாழ்கிறாள் அவள்
கழுத்து வடவடப்பை
நாவை வீசி அவள் நக்கித் துடைத்ததை
ஒரு முறை ஒளிந்திருந்து பார்த்தேன்.
Comments