தம்பி,
முதலில் உன் மேல்கோட்டை கழற்றி வானத்திற்கு வீசு..
தாவாக்கொட்டையில் குந்தியிருக்கும்
அந்த ஃப்ரெஞ்ச் மயிரை மழித்தெறி..
இனி கழுத்து நீண்ட குடுவைகளில்
எதையும் போட்டுக் கலக்காதே..
நமக்கு ஒன்றுமே புரிவதில்லை தம்பி..!
எதையும் யோசித்தல் கூடாது
அதிலும் ஆழ்ந்து யோசித்தல் கூடவே கூடாது
நமது பரிசோதனை கூடத்தின் மீது புல்டோசரை விடு..
ஒரு வேம்பின் கீழே
குறையுடையில் கிடப்போம் வாடா !
Comments