கெடாமீசை தடியனொருவன்
குழந்தையின் கழுத்தைத் திருகப் பார்த்தான் தூண்களைப் போன்ற கால்களுக்கிடையில் புகுந்து அது தப்பியோடியது. தடியன் துரத்திக் கொண்டோடினான். பொந்து போன்ற மறைவிடத்தில் குழந்தை சுருண்டு ஒளிந்து கொண்டது. தடியன் இப்போது தோல்வியில் உறுமும் வெறிமூண்ட விலங்கு. அளந்து வைத்தது போன்ற கச்சிதமான பொந்து குழந்தையைக் காத்தருளி விட்டது. பெரிய ஆபத்து நீங்க இருந்த தருணத்தில் பொடிக்கல் ஒன்றை எடுத்து தடியனின் பிடரிமேல் எறிகிறது குழந்தை. |
நண்பர் செந்தில் தான் புதிதாக துவங்க இருக்கிற மின்னிதழுக்காக பொறுப்பான வேலையொன்றை தந்து செய்துதரச் சொன்னார் . அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை . ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன் . ஆகவே “ பொறுப்பற்ற வேலையொன்றை “ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன் . அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்ட...

Comments