என்னுடையதா? என்னுடையதா? நெஞ்சு கிடந்து அடித்துக் கொண்டது அதே செவலை நிறம் அதே வால் சுழி எந்தச் சக்கரத்திற்கும் அசைந்து தராமல் சாலையோரம் கிடக்கிறது தயங்கித் தயங்கி நெருங்கி தலைகுனிந்து நோக்கினேன். நீண்டதொரு பெருமூச்சில் இயல்பிற்குத் திரும்பிய கணத்தில் சட்டென அங்கே தோன்றி மறைந்தார் வெள்ளை முக்காடிட்ட ஒரு துறவி வெள்ளை முக்காடிட்ட ஒரு பிசாசு |
Comments