பொறாமையை ஆழ்ந்து நோக்கினால் அது அன்பாக மாறிவிடும் என்று சொன்னார்கள். நான் நோக்கத் துவங்கினேன் அவ்வளவு ஆழமாக அவ்வளவு திடமாக அது ஆடவில்லை அசையவில்லை நானும் விடவில்லை நோக்கிக் கொண்டே இருந்தேன். திடீரென்று அதன் கண்களிலிருந்து தாரைகள் வழிந்து வழிந்து வந்தன. நிற்காமல் அழுதாலும் அது அன்பாக மாறியது போல் தெரியவில்லை. அழுகிற பொறாமைக்கு என்ன பெயர் வைப்பதென்று எனக்கும் தெரியவில்லை. |
Comments