காட்டுவழிப் பயணத்தில் கண்டேன் மண்ணில் புரண்டு கொண்டிருந்தன இரண்டு காடைக்குஞ்சுகள் வாகனச் சத்ததிற்கஞ்சி அவை உந்தி எழுகையில் மங்கலான உருவத்தில் கூடவே எழுந்தன இரு புழுதிக் காடைகள் ஒரு நொடியே ஆகி அழிந்த தீந்துளி காடைகள் அப்போதே பறந்து போய்விட்டன இதோ இந்தக்கனவு வரை வந்துவிட்டன புழுதிக் குஞ்சுகள். கண்ட கணமே மறைந்து விடும் ஒன்று கூடவே வருமோ? |
Comments