
பச்சைப் புல்வெளியில் பசுவொன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் வயிற்றடி நிழலில் மேய்ந்து கொண்டிருந்ததொரு கொக்கு. பேருந்தில் தன் பிள்ளைக்குப் பாடம் நடத்திய ஒரு அன்னை "அங்க பாரு.. அங்க பாரு...கொக்கு நிழலில் மாடு மேயுது பாரு..." என்றாள். பிறகு வாயைப் பொத்தியபடி "sorry.. sorry.." என்று அவசர அவசரமாக அதை அழித்தாள் "சரிதான்... சரிதான்.." என்று நான் சிரித்தேன். |
Comments