இப்போதெல்லாம் நீ என்னோடு இருக்க வேண்டியதில்லை. பார்க்க வேண்டியதில்லை பேச வேண்டியதில்லை புகைப்படங்கள் தேவையில்லை நாம் பிணைந்து கிடந்த நாட்களை தோண்டி தோண்டி முகர வேண்டியதில்லை. உனது ஊரின் பெயர் தாங்கிச் செல்லும் பேருந்துகளில் எதுவுமே என்னை கிளர்த்துவதில்லை. தகவல் தொடர்பின் எண்ணற்ற சாத்தியங்கள் தலை மேட்டில் தூங்கும் இந்தக் காலத்தில் அதில் ஒன்று கூட இப்போது எனக்கு அவசியப்படுவதில்லை. எனக்குத் தெரிந்துவிட்டது. நீ இல்லாது உன்னோடு இனித்திருக்க. |
Comments