ஆறு சந்துகள் கொண்ட இந்த நெடிய வீதியில் உனது வீடு எதுவென்று கண்டுபிடித்து விடுவேன் சங்குபூக்கள் முறுவலிக்கும் முற்றத்தில் ஒரு அல்சேஷன் குதூகலிக்கும் இளம்பச்சையில் சுடரும் அதோ, அந்த வீடு பிராயத்து வானத்தில் எனக்கென்றே ஒரு மீன் இருந்தது ஒவ்வொரு இரவிலும் என் மீனென்று நான் சுட்டும் மீன் அது எந்த மீனாயினும் என் சொந்த மீன்தான். |
Comments