அதனாலென்ன? விகடன் பொங்கல் சிறப்பிதழில் எனது கவிதைகள் வந்திருக்கின்றன. அழகான வடிவமைப்புடன் இடம் பெற்றிருக்கிற அக்கவிதைகளில் இரண்டு இடங்களில் விகடன் கத்தரி வைத்திருக்கிறது. ( வெறும் இரண்டே எழுத்தை தான் நீக்கியிருக்கிறார்கள் என்ற போதும் மனம் வேதனை கொள்ளவே செய்தது). “அதனாலென்னா? “ என்று ஒரு கவிதைக்கு புதிதாக ஒரு தலைப்பு வைத்திருக்கிறார்கள். நம்பர் 1 வார இதழில் உன் கவிதை வரும் என்றால் ‘அதனாலென்ன’ டா இசை!..... நண்பர் சுகுணா திவாகருக்கு என் நன்றியும், விகடனுக்கு என் நன்றியும், வருத்தமும். எடிட் செய்யப்படாத எனது கவிதைகள் கீழே... ```````````````````````````````````````````````````` ஓயாத திகில் என் உடல் ஆம்புலன்ஸ் தலை சைரன் பல்ப் மனம் இடுது நாசஊளை. ````````````````````````````````````````````````` 999 வாழ்க்கை இரட்டை வாழ்க்கை வாழ்கிறாய் எனக் கடிந்து கொள்கிறாயே நானென்ன அவ்வளவு நீதிமானா? அடி தோழி! நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன். ````````````````````````````````````````````````````````````````````````````` உன்னை அடைவது ... உன்னை முத்தமிட வேண்டியே உன் இதழ்களை முத்தமிடத் தவிக்கிறேன். உன் இதழ்களை முத்தம...