இந்தாருங்கள் , ஓர் உன்னதம் என்று என்னிடம் அவர் நீட்டிக்காட்ட நானதை நுணுகிப்பார்த்து “ யுரேகா .. யுரேகா … “ என்று வெற்றிக்களிப்பில் கூச்சிலிட்டேன் . அங்கே பாருங்கள் , ஓர் உன்னதம் என்று அவரெனக்கு சுட்டிக்காட்ட நானதை கூர்ந்து நோக்கி “ யுரேகா .. யுரேகா … “ என்று மகிழ்ச்சியில் கெக்கலித்தேன் . வேறெங்கும் போக வேண்டாம் .. உங்கள் பக்கத்தில் பாருங்கள் , ஓர் அதிஉன்னதம் என்றவர் முகஞ் சிவந்து சீறி வர “ யுரேகா .. யுரேகா … “ என்று நான் பொறுமையாய் முணுமுணுத்தேன் . ஐயா , ஓட்டை இல்லாததென்று வையத்தில் ஏதுமில்லை சரிதான் விடுங்கள் என்றார் . உன்னதங்களைக் கட்டிக்கொண்டு அவரழுவதென்றும் ஓட்டைகளைக் கட்டிக்கொண்டு நானழுவதென்றும் சமரசம் கண்டது சர்ச்சை . நன்றி: காலச்சுவடு - பிப்ரவரி-2015