முகத்தில் சித்திரை எரிந்து கொண்டிருந்தது.
அயோக்கியனிலும் அயோக்கியன்
சாத்தானுக்கெல்லாம் சாத்தான்
என்று வசைமாரி பொழிந்தாள்
பதுங்கிப் பதுங்கி
சமையலறையைச் சூறையாடும் சுண்டெலி என்றாள்.
இந்த உலகிலேயே
மிகவும் அருவருப்பான விஷயமாக மாறிவிட்ட அவன் முகத்தை
இனி எப்போதும் காண விரும்பவில்லையவள்
அந்த வீடியோ சாட்டின் கோணத்தில்
ஒரு சின்ன திட்டமிருந்தது
ஸ்லீவ் லெஸ்ஸின் மீது
அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவளாய்,
தன் காதலிலிருந்து
கண்காணாத இடத்திற்கு போய்விடுமாறு
அடித்தொண்டையில் கத்தினாள்.
Comments