நண்பனும் கவிஞனுமான வே.பாபு 11/11/2018 அன்று மாலை சுமார் 6 மணியளவில் உடல் நிலை கோளாறு காரணமாகக் காலமானான். 1974 ல் பிறந்த பாபு தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வந்தவன். எனினும் 100- கும் குறைவான கவிதைகளையே எழுதியுள்ளான். தக்கை என்கிற சிற்றிதழின் ஆசிரியர்களுள் ஒருவன். பாபுவின் கவிதைகள் எளியவை. சமத்காரங்கள் அற்றவை. உணர்ச்சிகரம் என்கிற ஒன்றைத் தவிர அதனிடம் வேறு ஆபரணங்கள் ஏதுமில்லை. இந்த நோக்கில் அந்தக் கவிதைகளை பலகீனமானவை என்று சொல்லி விடலா...