சிக்னல் பொழுதில்
கருப்புக் கண்ணாடிக்கு அப்புறம்
மங்கலான தோற்றத்தில்
அவ்வளவு ஆதூரமாய்
கையாட்டிச் சிரிக்கிறது ஒரு குழந்தை.
கண்ணாடிக்கு அப்புறம்
மங்கலான தோற்றத்தில்
அற்புதங்கள்
கையாட்டிச் சிரிப்பதுவோ மொத்த வாழ்வும்?
கையாட்டிச் சிரிப்பதுவோ மொத்த வாழ்வும்?
அடீ... அன்னை !
கண்ணாடிகளைக் கீழிறக்கு
இல்லையெனில்
உன் பிள்ளைகளை அடக்கு
நன்றி : உயிர்மை : நவம்பர்- 18
Comments